
கொழும்பு: கடலில் குளித்த சிங்கள பெண் நடனக் கலைஞர் அயோத்திய மிஹராவிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மாத்தறைப் பிரதேசத்தில் உள்ளது பொல்ஹேன கடல் பகுதி. இந்த கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கள பெண் நடனக் கலைஞரான அயோத்திய மிஹராவி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது 19 வயதான ஒரு வாலிபர் கடலுக்கு அடியாகச் சென்று அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்த அந்த வாலிபர் தனது தவறை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த பெண் கலைஞரிடம் நடந்து கொண்ட சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இனி வரும் காலத்தில் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.


















