Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

யூரோ கோப்பை கால்பந்து: இன்றைய காலியுறுதியில் மிக வலுவான ஜெர்மனியை எதிர்கொள்கிறது கிரீஸ்

Posted by:
Published: Friday, June 22, 2012, 12:10 [IST]

 Greece Hopes Payback Against German

கிடான்ஸ்க்: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய கால் இறுதியில் வலுவான ஜெர்மனியும் கிரிசூம் மோதுகின்றன.

ஐரோப்பிய நாடுகளிடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் லீக் போட்டிகள் முடிவடைந்து கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கால் இறுதியின் முதல் ஆட்டத்தில் செக் குடியரசை போர்ச்சுகல் வீழ்த்தியிருந்தது. இன்றைய ஆட்டத்தில் மிக வலுவான ஜெர்மன் அணி, கிரீஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் லீக் சுற்றில் 3 போட்டிகளில் வென்ற ஒரே அணி ஜெர்மனி மட்டும்தான். நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகிய 3 அணிகளையும் ஜெர்மனி வீழ்த்தியிருந்தது. ஜெர்மன் அணியின் தூண்களாக மூன்று மரியோ கோம்ப்ஸ், ஸ்வைன்ஸ்டெய்கர், போடோல்ஸ்கி, மெசூத் ஒசில், தாமஸ் முல்லர் ஆகியோர் உள்ளனர்.

கிரீஸ் அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் கரகோனிஸ் 2 முறை மஞ்சள் அட்டை பெற்றுவிட்டதால் இன்றைய முக்கிய போட்டியில் அவர் ஆடப்போவதில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகக் கூறப்படுகிறது. ஆனால் சமராஸ், சல்பின்கிடிஸ், பெனிஸ் ஜிகாஸ் ஆகியோரின் ஆட்டம் ஜெர்மனியை சமாளிக்க உதவலாம்.

யூரோ கால்பந்து வரலாற்றில் இதுவரை கால் இறுதியில் தோற்காத ஜெர்மனி இன்றும் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு

English summary
Everyone knows the score before a game starts. It is 0 to 0. The playing field is level. The referee is fair. The rules favor no one. If only such principles were seen applying to the euro zone currency union, the emotions over Friday’s Euro 2012 soccer quarterfinals between Greece and Germany would not be so intense.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI