Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

யூரோ கோப்பை கால்பந்து: செக் குடியரசை வீழ்த்தி அரை இறுதிக்குப் போனது போர்ச்சுகல் அணி

Posted by:
Published: Friday, June 22, 2012, 9:28 [IST]

 Ronaldo Heads Portugal Semifinal At Euro Cup

வார்ஷாவ்: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது கால் இறுதியில் அதிரடி ஆட்டக்காரர் ரொனால்டோவின் கோலால் போர்ச்சுகல் அணி செக் குடியரசை வீழ்த்தி அரை இறுதிக்கு முதலாவது அணியாக நுழைந்து இருக்கிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்துகின்றன. கடந்த 8-ந் தேதி தொடங்கிய யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

லீக் போட்டிகளின் முடிவில் செக்குடியரசு, கிரீஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த செக்குடியரசு- பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதின

ஆட்டத்தின் முதல்பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் போர்ச்சுகலின் கேப்டனுன் அதிரடி ஆட்டக்காரருமான ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். ஆனால் செக் குடியரசால் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது..

English summary
The Czech Republic failed to turn back the clock and repeat their 1996 glory Thursday night when Cristiano Ronaldo inspired Portugal to a convincing 1-0 quarterfinal victory at the European Championship here.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter