Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சங்மாவுக்கு மேலும் ஒரு எம்.பி, 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது

Posted by:
Published: Sunday, June 24, 2012, 16:28 [IST]

 Sangma Gets Mizo National Front Support

ஐஸ்வால்: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு மிஸோ தேசிய முன்னணி கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.

இதன் மூலம் மேலும் ஒரு எம்.பி மற்றும் 4 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

ஜூலை 19ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மா ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்கு ஏற்கனவே அதிமுக, பாஜக, பிஜூ ஜனதாதளம், சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஐந்தாவதாக ஒரு கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.

அக்கட்சியின் பெயர் மிஸோ தேசிய முன்னணி. மிஸோரம் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சி இந்தக் கட்சி. இக்கட்சி தற்போது சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமாஐன ஷோராம்தங்கா கூறுகையில்,

பி.ஏ.சங்மா மலைவாழ் இனத்தை சேர்ந்த வடகிழக்கு மாநிலத்தவர். இவர் கிறிஸ்தவரும் ஆவார். மிக உயர்ந்த பதவியை அதுவரை மலைவாழ் இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர் யாரும் வகிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் இவரை ஆதரிக்கிறோம் என்றார்.

English summary
Main opposition party in Mizoram, Mizo National Front (MNF) is likely to support the candidature of Purno A Sangma as President of India when the polling will be held on July 19. Former chief minister and MNF chief Zoramthanga said on Sunday that formal announcement would be made during this week after the meeting of the party high command on the issue.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter