For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மே 23ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.54 உயர்த்தப்பட்டது. பின்னர் ரூ. 2 வரை குறைக்கப்பட்டது.

இந் நிலையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விலையை மேலும் ரூ. 4 வரை குறைக்க முடியும் என்ற சூழல் எழுந்துள்ளது. ஆனால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடும் ரூபாயின் அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் உள்ளன.

இந் நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதற்கு மேலும் பெரிய அளவில் சரியாமல் இருந்தால், பெட்ரோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலர் குறைந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 34 பைசா குறையும். ஆனால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1 ரூபாய் சரிந்தால் கூட பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 பைசா உயர்த்த வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The oil marketing companies are likely to slash the petrol prices by up to Rs. 4 a litre from July 1. The steep fall in global prices of crude oil as well as petrol on which the companies base the domestic prices every fortnight. The price cut will come as a big respite for the consumer after the recent increase of Rs. 7.54 a litre on May 23 — the highest so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X