Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பஞ்சாப் தெரு நாய்களை வடகிழக்கு மாநிலத்தில் விடணும்: காங். எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை!

Posted by:
Published: Friday, June 29, 2012, 17:34 [IST]

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தெருவில் திரியும் நாய்களை பிடித்துக் கொண்டு போய் நாகலாந்து, மிசோராம் மற்றும் சீனாவில் விட்டுவிடக் கோரி பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கொண்டு வந்த தீர்மானம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜித்சிங், மாநிலத்தில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் காடுகளிலோ, மிருகக் காட்சி சாலைகளிலோ அல்லது நாகாலாந்து, மிசோராம் மற்றும் சீனாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். இங்கே நாய்களின் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கிறது. சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் சுனில் ஜஹார் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நாய், மனிதர்களின் நட்பு விலங்கு. இந்தத் தீர்மானம் சரியானது அல்ல என்றார்.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக பிராணிகள் நல சங்கமும் களத்தில் குதித்துள்ளது. ஈவிரக்கமற்ற தீர்மானம் என்று அந்த அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாய் உணவு

நாகலாந்தில் நாய் கறி பிரபலமான உணவு வகைகளில் ஒன்று. நாயை உயிரோடு பிடித்து அடித்துக் கொலை செய்து கறியை கூறு போட்டு விற்பனை செய்யும் காட்சியை நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் காண முடியும். நாகலாந்துவாசிகள் வாழும் இடங்களில் கூட நாய்களை காண முடியாத அளவுக்கு அவர்கள் நாய்க்கறி பிரியர்கள். இதனை மனதில் வைத்துதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜித்சிங் இத்தகைய ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

English summary
Congress legislator Ajit Singh Mofar moved a resolution in the Punjab assembly on Thursday seeking to tackle stray dogs in the state by sending them to China, Mizoram or Nagaland, for "whatever they do to them".
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 209 / 4, 67 Overs