Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆதர்ஷ் ஒதுக்கீடு விவகாரம்: விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார் அசோக் சவாண்

Posted by:
Published: Saturday, June 30, 2012, 12:01 [IST]

மும்பை: ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் இன்று விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகும் 3-வது முன்னாள் முதல்வர் அசோக் சவாண்.

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மஹாராஷ்டிரா அரசு சார்பில் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் கமிஷன் முன்பு கடந்த வியாழக்கிழமையன்று ஆஜரான முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் முதல்வராக இருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக் கமிஷன் முன்பு அசோக் சவாண் ஆஜரானார். அவரிடம் விசாரணைக் கமிஷன் அதிகாரிகள் சராமரி கேள்வி கேட்டு விளக்கம் பெற்றனர்.

Topics: ashok chavan
English summary
Former Maharashtra chief minister Ashok Chavan on Saturday deposed before the judicial commission probing the Adarsh Housing Society scam. He is the third former Maharashtra chief minister to do so.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST