Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான சுர்ஜித்சிங் உளவாளி அல்ல: மத்திய அரசு விளக்கம்

Posted by:
Published: Saturday, June 30, 2012, 10:19 [IST]

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 31 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான சுர்ஜித்சிங் தாம் இந்தியாவின் உளவாளியாகவே பாகிஸ்தான் சென்றதாக கூறியிருப்பதை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது:

சுர்ஜித்சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதை நாங்கள் ஏற்க முடியாது. பாகிஸ்தானை வேவுபார்க்க வேண்டிய தேவையும் இல்லை. உளவாளிகளை அனுப்பவும் தேவையில்லை. அப்படி சிலர் தம்மை உளவாளியாகக் கருதிக் கொண்டால் அது அவர்கள் தங்களை முக்கியத்துவப்படுத்திக் கொள்வதற்காகத்தான். சுர்ஜித்சிங் கூறியிருப்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்றார் அவர்.

English summary
Government described as "completely wrong" that Surjeet Singh, the Indian prisoner who has just returned from Pakistan, had been sent by intelligence agencies to that country as a spy.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs