Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகள்: விளம்பரத்துக்காக போராடும் பெப்சி, வோடஃபோன்

Posted by:
Published: Saturday, June 30, 2012, 12:08 [IST]

 Pepsi Vodafone Eye Last Minute Ad Slots Euro Cup Final

மும்பை: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின் போதான விளம்பரங்களுக்காக பெப்சி மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் நியோ ஸ்போர்ட்ஸ் சேனலுடன் இறுதி கட்டப் பேச்சுகளை நடத்தி வருகின்றன.

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் போட்டிகளை நியோ ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பி வருகிறது. இறுதிப் போட்டிக்கான விளம்பரங்களின் கட்டணத்தை மிக அதிக அளவில் நியோ ஸ்போர்ட்ஸ் சேனல் உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 10 செகண்ட் ஸ்பாட் ஒன்றுக்கு ரூ40 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை பொதுவாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இறுதிப் போட்டி ஒளிபரப்பின் போது விளம்பரங்களை ஒளிபரப்ப 10 செகண்ட் ஸ்பாட்டுக்கு ரூ1 லட்சம் வரை நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெப்சி மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பை பார்த்து ரசித்தோரின் எண்ணிக்கையைவிட நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரானது 25 விழுக்காடு கூடுதல் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Big spending advertisers , such as cola maker PepsiCo and mobile operator Vodafone, are in last-minute negotiations with Neo Sports for being seen during the final of Euro 2012 on Sunday. Typically, sports broadcasters leave some amount of advertising inventory to earn a premium at the last leg of a tournament.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Rajasthan Royals: 100 / 4, 13.4 Overs
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.