Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இலங்கை அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட இணையதள அலுவலகத்துக்கு சீல்!

Posted by:
Published: Saturday, June 30, 2012, 18:50 [IST]

கொழும்பு: கொழும்பில் உள்ள சிறிலங்கா மிரர் இணையத்தளத்தின் அலுவலகம் இலங்கை அரசால் சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றிய 9 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பிரபல செய்தி ஊடகம் சிறிலங்கா மிரர் இணையத்தளம். இந்த இணைய தளத்தின் அலுவலகம் கொழும்பில் உள்ளது. இலங்கை அரசுக்கு விரோத தகவல்களை இந்த இணைய தள அலுவலகத்தில் இருந்ததாக இலங்கை அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் சிறிலங்கா மிரர் இணையத்தளத்தின் அலுவலகத்தில் இலங்கை அரசு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் உட்பட பல பொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சிறிலங்கா மிரர் செய்தி ஆசிரியர் கெலும் ஷிவானந்த, புகைப்பட நிபுணர் அஜித் செனெவிரத்ன, சிறிலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தள தமிழ் செய்தி தொகுப்பாளர் சித்திக் காரியப்பர் ஆகியோர் உட்பட 9 ஊடகவியலாளர்களை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாக கூறப்படுகின்றது. இலங்கை அரசின் இந்த செயலுக்கு ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும் (JDS), மற்றும் சர்தேச பத்திரிக்கையாளர்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது,

கொழும்பு நகரின் கேட்டே பகுதியில் உள்ள அலுவலத்தை 12க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென நுழைந்து சோதனையிட்டனர். 3 மணிநேரத்திற்கு மேலாக சோதனையிட்டதில், அங்கிருந்து கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பணியாற்றி கொண்டிருந்த 9 பேரை, போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர் என்றனர்.

English summary
Sri Lankan police have sealed off the office of Srilankan mirror news websites, arrested 9 workers and seized computers and documents.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI