Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டைவர்ஸ் கேட்ட மனைவியை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சராமரியாக வெட்டிய கணவன்

Posted by:
Published: Saturday, June 30, 2012, 11:10 [IST]

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பரசட் நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்ட மனைவியை வழக்கறிஞர்கள் முன்னிலையில் அரிவாளால் கணவனே கொடூரமாக வெட்டிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

பரசட்டை சேர்ந்த பிரசாந்த்ஜித் மாஜிக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கோரி பரசட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விவகாரத்து மனு தாக்கலுக்குப் பிறகு நேற்றுதான் முதன் முறையாக இருவரும் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வழக்கறிஞர்கள் அறைக்குள் ஜெயந்தி சென்றுவிட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த கணவர் பிரசாந்த்ஜித் வழக்கறிஞர்கள் அறைக்குள் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயந்தியின் தலையில் வெட்டினார். வழக்கறிஞர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் மீண்டும் ஜெயந்தியை வெறிபிடித்தார்போல் அவர் வெட்டினார். அங்கு இருந்த நீதிமன்ற பணியாளர் ஒருவர் துணிச்சலுடன் பிரசாந்த்ஜித்தை மடக்கினார். பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் ஜெயந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் பிரசாந்த்ஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரசாந்த்ஜித்தின் வெறிச்செயலால் வழக்கறிஞர்கள் பலரும் ரத்தத் துளிகளால் நனைந்திருந்த காட்சி பார்வையாளர்களை கதிகலங்க வைத்தது.

English summary
Angry with his wife for seeking a divorce, a 25-year-old man allegedly hacked her with a sickle inside the Barasat court premises on Friday morning as dozens of lawyers looked on horrified. The victim is fighting for life in a hospital.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter