Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கைதுக்கு பயந்து அல்ல, போராட்டம் வெற்றி பெறவே மனு கொடுத்தோம்! - கருணாநிதி

Posted by:
Published: Saturday, June 30, 2012, 11:37 [IST]

 No Fear On Arrest Says Karunanidhi

சென்னை: திமுகவினர் யாரும் கைதுக்கு பயந்து போலீசாரிடம் மனு கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்...

கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்களே?.

பதில்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கேள்வி: இலங்கை மந்திரி ஒருவர் தமிழக தலைவர்களை தாக்கி பேசி வருகிறாரே?.

பதில்: அவரது பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாது. அதை பொருட்படுத்த தேவையில்லை.

கேள்வி: செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 15 நாட்களாக 17 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்களே?.

பதில்: செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அப்படியில்லை. செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

கேள்வி: தி.மு.க. நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக தி.மு.க.வினரை கைது செய்யக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து இருக்கிறீர்களே?.

பதில்: ஏற்கனவே ஒரு வழக்கு சம்பந்தமாக வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளோம். கைதுக்கு பயந்து மனு தரவில்லை. அறவழி போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே கொடுத்துள்ளோம்.

கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் தி.மு.க. முக்கிய தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறதே?.

பதில்: யார், யார் பங்கேற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.


English summary
DMK president Karunanidhi says that the DMK isn't having any fear on arrests of its leaders and cadres in the forthcoming protest.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter