சிட்னி: இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றிய பல படகுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை அடைந்துள்ளன. இதில் மொத்தம் 142 ஈழத் தமிழர்கள் பயணித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து புறப்பட்ட முதல் படகு 44 பேருடன் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிறிஸ்துமஸ்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அகதிகள் சுமார் 100 பேருடன் மற்றொரு படகு கிறிஸ்மஸ் தீவை அடைந்துள்ளது. மூன்றாவது அகதிகள் படகு கிறிஸ்துமஸ் தீவுக்கு 30 கடல் மைல் தொலைவில் மறிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டது..
மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 93 அகதிகளுடன் ஒரு படகும், 60 பேருடன் மற்றொரு படகும் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அபாயகரமான படகு பயணம் மூலமாக பயணித்தோரில் 142 ஈழத் தமிழர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


















