For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவர், மகளை கைவிட்ட அஸ்ஸாம் பெண் எம்எல்ஏ, 2வது கணவரை சரமாரியாக தாக்கிய மக்கள்!

Google Oneindia Tamil News

Assam MLA thrashed out of honeymoon hangover
கரீம்கஞ்ச்: முதல் கணவரையும், அழகான மகளையும் விட்டு விட்டு, பேஸ்புக் மூலம் கிடைத்த தனது காதலரை மணந்து கொண்டு போய் விட்ட அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூமி நாத் மற்றும் அவரது 2வது கணவரையும் பொதுமக்கள் சுமார் 200 பேர் சரமாரியாக அடித்து உதைத்த செயலால் அஸ்ஸாம் மாநிலமே பரபரப்பாகியுள்ளது.

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் ரூமிநாத். இவர் முன்பு பாஜகவில் எம்.எல்.ஏவாக இருந்தார். பின்னர் கட்சி மாறி காங்கிரஸில் சேர்ந்து எம்.எல்.ஏவானார். போர்க்கோலா தொகுதி உறுப்பினராக இருக்கிறார். டாக்டரும் ஆவார்.

இவருக்கு ராகேஷ் சிங் என்ற கணவரும், 2 வயதான மகளும் உள்ளனர். இந்த நிலையில் பேஸ்புக் மூலம் ஜாகிர் உசேன் என்பவர் ரூமிக்கு நண்பரானார். இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து தனது கணவர், மகள் ஆகியோரை விட்டுப் பிரிந்து பேஸ்புக் காதலருடன் ஓடி விட்டார் ரூமி நாத். இதனால் அஸ்ஸாமே பரபரப்பானது.

பேஸ்புக் காதலரை மணப்பதற்காக இஸ்லாமுக்கு மதம் மாறிய ரூமிநாத், அவரை மணம் புரிந்து கொண்டார். இது அஸ்ஸாமில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கரீம்கஞ்ச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூமிநாத்தும், அவரது 2வது கணவரும் தங்கியிருக்கும் தகவல் தெரிந்து கிட்டத்தட்ட 200 பேர் அங்கு நள்ளிரவில் புகுந்தனர். திமுதிமுவன புகுந்த அவர்கள் ரூமிநாத்தின் அறைக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த ரூமிநாத்தையும், ஜாகிரையும் சரமாரியாக தாக்கினர். ரூமிநாத்தின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அடித்தனர். இதில் அவருக்கு பெரும் ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல ஜாகிருக்கும் அடி விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பானது.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். மக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரூமிநாத்தையும், ஜாகிரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களுக்கு பெரிய அளவில் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்தை மாநில காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

English summary
For Assam lawmaker Rumi Nath, the honeymoon period of her second marriage, suddenly came to a violent end. The legislator along with her husband Jaki Jakir was beaten black and blue by a mob of 200 people at the state’s Karimganj town allegedly for bigamy and her conversion to Islam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X