Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஊழல் முறைகேடு: ஓய்வு பெற்ற நாளில் என்.எல்.சி. தலைவர் அன்சாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Posted by:
Published: Sunday, July 1, 2012, 9:39 [IST]

நெய்வேலி: என்.எல்.சி. தலைவராகப் பணியாற்றிய ஏ.ஆர்.அன்சாரிக்கு ஊழல் தொடர்பான புகாரில் அவர் ஓய்வு பெற்ற நாளான சனிக்கிழமையன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

என்.எல்.சி. தலைவராக ஏ.ஆர்.அன்சாரி பணியாற்றிய காலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பணிகள் முடிந்து தற்போது மின்னுற்பத்தி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தியது இதையடுத்து விசாரணை நடத்திய கண்காணிப்பு ஆணையம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை ஆகியவை இணைந்து குற்றப்பத்திரிகையை என்.எல்.சி. நிர்வாகத்துக்கு அனுப்பியதைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்சாரியிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. இதையடுத்து என்.எல்.சி. தலைமைக் கண்காணிப்புத் துறை, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகியுள்ளது. அவர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை நாளில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
NLC chariman R. Ansari chargesheeted for corruption-related complaints received on Saturday in the day he retired.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI