Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காதலும், சிகரெட்டும் ஒன்றுதான்... கவிதை எழுதி வைத்து விட்டு ஓடிப் போன நர்ஸ்!

Posted by:
Published: Sunday, July 1, 2012, 13:19 [IST]

தேனி: தேனியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், காதலும் சிகரெட்டும் ஒன்றுதான் என்று கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததால் இப்படி அவர் எழுதி வைத்துள்ளார். இதனால் அவர் காதலருடன் ஓடிப் போய் விட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையையும், தேடுதலையும் முடுக்கி விட்டுள்ளனர்.

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. 23 வயதான இவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டு கரூரில் உள்ல தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேயே தங்கியுள்ளார்.

மாதம் ஒருமுறை தனது ஊருக்கு வருவது வழக்கம். கடந்த 23ம் தேதி சரண்யாவின் தந்தை சக்கையப்பன், தனது மகளுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உனக்கு திருமணம் நிச்சயம் செய்ய வேண்டும், உடனே ஊருக்குக் கிளம்பி வா என்று கூறியுள்ளார்.

இதையடுத்து 24ம் தேதி வருவதாக கூறியுள்ளார் சரண்யா. ஆனால் அன்று அவர் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

இதையடுத்து குழம்பிப் போன சரண்யாவின் பெற்றோர் கரூர் கிளம்பி வந்தனர். அங்கு மருத்துவமனையில் விசாரித்தபோது 24ம் தேதியே சரண்யா கிளம்பிப் போய் விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கையப்பன் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சரண்யா தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனை நடத்தினர். அவரது டைரி ஒன்று அப்போது சிக்கியது. அதில் ஏராளமான காதல் கவிதைகள் இருந்தன. கடைசியாக அவர் எழுதியிருந்த கவிதை இப்படிப் போகிறது....

காதலும், சிகரெட்டும் ஒன்று தான்
இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு இதயத்தை புண்ணாக்கிவிடும்
காலமும், காதலும் ஒன்றுதான்
இரண்டுமே நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்
நிற்கும்போது அதுதான் என் முடிவு நாள்

இதனால் சரண்யா தனது காதலருடன் ஓடிப் போயிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் யாரையாவது காதலித்தாரா, அப்படியானால் அந்தக் காதலர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A nurse from Theni district has gone missing from her working hospital in Karur. Police have filed a case and search is on.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL