Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

திருப்பதி-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்கியது

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 12:52 [IST]

மன்னார்குடி: திருப்பதி-மன்னார்குடி விரைவு ரயில் போக்குவரத்து செவ்வாய்கிழமை துவங்கியது.

திருப்பதி-மன்னார்குடி இடையிலான விரைவு ரயில் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. விரைவு ரயில் (எண் 17407) செவ்வாய், வியாழன், சனிக்கிழமை அன்று காலை 10.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு இரவு 10.35க்கு மன்னார்குடி வந்தடையும். அதே போன்று மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில்(எண் 17408) அன்று மாலை 4.35 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

இந்த ரயில் பாகலா, சித்தூர், காட்பாடி, வேலூர், ஆரணி ரோடு, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஒரு ஏ.சி. பெட்டி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய 6 பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த வசதியை பொது மக்களும், ரயில் பயணிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

English summary
Tirupati-Mannargudi tri-weekly express starts functioning from tuesday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST