Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மும்பையில் வெடிகுண்டு பீதி-சோதனையில் ஒன்றுமில்லை என்று கண்டுபிடிப்பு

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 14:51 [IST]

மும்பை: மும்பையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மர்மப் பொருள் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பீதி மக்கள் இடையே பரவியது. ஆனால் சோதனைக்கு பிறகு அது வெடிகுண்டு அல்ல என்று போலீசார் தெரிவித்ததால், அந்த பீதி அடங்கியது.

மும்பை போலீசாருக்கு இன்று பகல் 12.20 மணி அளவில் ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. இதில் பேசிய நபர், சிகந்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து சிகந்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்ற போலீசார், விற்பனை மால் அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பையை கண்டெடுத்தனர். இதில் ஓயர்கள் இணைக்கப்பட்டு வெடிகுண்டு போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய பொருள் ஒன்று இருந்தது.

இதையடுத்து வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சந்தேகத்திற்கு இடமாக பை சோதனையிடப்பட்டது. சோதனையில் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே இது குறித்து பயப்பட தேவையில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு பீதியால் அந்தேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
A suspicious object has been found near a mall in Andheri in Mumbai. But nothing was found as explosive, police said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter