Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நாகையில் வாக்கிங் சென்ற பாஜக நிர்வாகி படுகொலை: பதட்டம்

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 9:09 [IST]

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்‌தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புகழேந்தி வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நாகப்பட்டினத்தைச் ‌சேர்ந்த புகழேந்தி(54). அவர் தினசரி தனது வீ்ட்டில் இருந்து சுமார் 5 கீ.மீ.தூரம் வரை வாக்கிங் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல் புகழேந்தி இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வாக்கிங் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர‌ை வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

அந்த பக்கம் வாக்கிங் வந்த சிலர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புகழேந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை குறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரண‌ை நடத்தி வருகி்ன்றனர். இந்த சம்பவத்தால் நாகையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வாக்கிங் கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Unknown persons murdered BJP functionary Pugazhenthi(54) while he went for a walk in the early hours of wednesday. Police have registered a case and are in search of the culprits.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 04:00 pm IST