Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

எக்குத்தப்பாக குவிந்த திமுகவினர்...எங்கு போய் அடைப்பது என தெரியாமல் விடுவித்த அரசு!

Posted by:
Updated: Wednesday, July 4, 2012, 18:26 [IST]

 Massive Arrest Dmk Cadres Put Police In Great Fix

சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதானதால், அவர்களை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் கடைசியில் அத்தனை பேரையும் விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைகள் உள்ளன. இதில் 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடியும். தற்போது சிறைகளில் 13,970 கைதிகள் உள்ளனர்.

இன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று அரசும், காவல்துறையும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடி விட்டனர். அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கு கல்யாண மண்டபங்களில் வைக்கப்பட்டனர்.

அடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையி்ல அடைக்க வேண்டும். ஆனால் இத்தனை பேரையும் எப்படி சிறைகளில் அடைப்பது என்று தெரியாமல் காவல்துறையினர் விழித்தது.

சென்னையில் மட்டும் 50,000 பேர் வரை கைதானார்கள். ஆனால் புழல் சிறையில் இத்தனை பேரையும் அடைக்க முடியாது. சரி வேலூருக்கும் பிற ஊர்களுக்கும் கொண்டு போவதாக இருந்தாலும், அந்தப் பகுதிகளிலும் பல ஆயிரம் பேர் கைதானார்கள். எனவே திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது, இட வசதி போதாதே என்று காவல்துறையினர் குழப்பமடைந்துனர்.

இதுகுறித்து அரசுக்குத் தகவல் போனது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி அத்தனை பேரையும் விடுவித்து விட்டனர் போலீஸார்.

Story first published:  Wednesday, July 4, 2012, 14:24 [IST]
English summary
TN police in great mess after more than one lakh DMK cadres have been courted arrest today. The authorized combined capacity of the state's 134 prisons, small and big, is more than 21,900. So Police are in great confusion how to lodge the cadres in prisons.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs
Final , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST