Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

6ல் வனதிருப்பதி பெருமாள் கோவில் வருஷாபிஷேக விழா: சிற்பபு பேருந்து, ரயில் இயக்கம்

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 17:41 [IST]

திருச்செந்தூர்: வனதிருப்பதி புன்னை சீனிவாச பெருமான் கோவிலில் 3வது வருஷாபிஷேக விழா வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வனதிருப்பதி புன்னை சீனிவாச பெருமான் கோவிலில் 3வது வருஷாபிஷேக விழா வரும் 6ம் தேதி நடக்கிறது. இந்த விழாவையொட்டி வரும் 6ம் தேதி காலை 10.15 மணிக்கு கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.30 சுவாமிக்கு ஊஞ்சல் சேவை வைபவமும், 6 மணி்க்கு மூம்மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு வானவேடிக்கை, இரவு 8 மணிக்கு லஷ்மன், ஸ்ருதி மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு வரும் 6ம் தேதி நெல்லையில் இருந்து காலை 8.15 மணிக்கும், பகல் 12.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கும், மாலை 3.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூலை 6 மற்றும் 7ம் தேதிகளில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சச்சனாவிளை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Vanatirupathi temple varushabisheka function will be held on july 6. Specail trains and buses will be provided on that day.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL