Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆஸ்திரேலிய கொடியை வரைந்து டாப்லெஸ் போட்டோ எடுத்த இந்திய பாப் பாடகி

Posted by:
Published: Wednesday, July 4, 2012, 16:33 [IST]

 Pop Stars Topless Picture Leaves

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகர சுற்றுலா குறித்து இந்தியாவில் விளம்பரம் செய்ய நியமிக்கப்பட்ட அம்பாசிடரான இந்திய வம்சாவழியைச் சேர்ந்த குவீன்ஸ்லேண்ட் பாப் பாடகி ஆயிஷா சாகர் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குவீன்ஸ்லேண்டில் வளர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாப் பாடகி ஆயிஷா சாகர். ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட் குட்வில் அம்பாசிடராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவில் கோல்ட் கோஸ்ட் நகரின் சுற்றுலாப் பெருமைகள் குறித்து விளம்பரம் செய்யவிருக்கிறார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலாடை அணியாமல் ஆஸ்திரேலிய நாட்டுக் கொடியை தனது உடலில் வரைந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்களால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆயிஷா இப்படி டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளது இந்திய மக்களிடையே கோல்டு கோஸ்டின் இமேஜை கெடுத்துவிடும் என்று குவீன்ஸ்லேண்டைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நீரஜ நாராயண் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆயிஷா இந்தியாவில் வசிக்கிறார். ஆனால் அவ்வப்போது கோல்டு கோஸ்ட் சென்று மாதக்கணக்கில் தங்கிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய போட்டோக்கள் குறித்து ஆயிஷா கூறுகையில்,

இந்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட எடுக்கவில்லை. இந்தியாவில் எனது கெரியரை மேம்படுத்த எடுத்தேன். ஒரு ஆர்ட்டிஸ்டாக என்னை விளம்பரப் படுத்த எடுத்த போட்டோக்கள் அவை என்றார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs