Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தமிழ்நாடு மாதிரி இல்லாம 24 மணி நேரமும் தமிழர்களுக்கு மின்சாரம் கொடுக்கிறோம்: இலங்கை அமைச்சர்

Posted by:
Published: Friday, July 6, 2012, 12:46 [IST]

கொழும்பு: தமிழ்நாட்டைப் போல் 12 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தாமல் இலங்கைத் தமிழர்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறோம் என்று இலங்கை வாய்க்கொழுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கிண்டலடித்திருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சம்பிக்க ரணவக்க பேசியதாக வீரகேசரி நாளேட்டில் பதிவாகியுள்ள செய்தி

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இலங்கையில் மின்விநியோகம் சீராகவே உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது மின்வெட்டே இல்லாமல் 24 மணிநேரமும் இலங்கைத் தமிழர்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.

வறட்சி மற்றும் மழையின்மையால் நீர்மின்சாரம் தடைபட்டிருக்கிறது. இருந்தாலும் தடையற்ற மின்சாரமே வழங்கப்படுகிறது. சம்பூரில் அனல் மின்நிலையப் பணிகள் முடிவடைந்தால் 2014-ம் ஆண்டு கூடுதலாக மின் உற்பத்தியைப் பெற முடியும் என்றார் சம்பிக்க ரணவக்க.

English summary
Power and Energy Minister Patali Champika Ranawaka yesterday said that no power cuts will be imposed in the country though water levels in hydro-power reservoirs have dropped drastically due to the drought.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.