Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு- ஜூலை 10-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by:
Published: Saturday, July 7, 2012, 16:04 [IST]

 Jayalalithaa Disproportionate Asset

பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உடல் நலக் குறைவு என்பதால் வழக்கை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது உதவியாளரான சந்தேஷ் செளடா கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதற்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மணிசங்கர் மற்றும் பி. குமார் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஜூலை 9-ந் தேதி தங்களுக்கு சென்னையில் வேலை இருப்பதால் ஜூலை 11 அல்லது 12-ந் தேதிக்கு வழக்கின் விசாரணையை நடத்தலாம் என்று கூறினர். இதற்கு சந்தேஷ் செளடா எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் நடைபெறக் கூடும் என்பதாலும் ஜூலை 13-ந் தேதி மத்திய சட்ட ஆணையத்தின் பணிக்காக டெல்லி செல்ல வேண்டியதிருக்கிறது என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா வரும் 10-ந் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

English summary
The Special Court trying the disproportionate asset case against Tamil Nadu Chief Minister J Jayalalithaa on Saturday adjourned it to July 10 after the Special Public Prosecutor (SPP) sought time to place his arguments on health grounds.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter