For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்புறம், உங்க கம்ப்யூட்டர் நல்லாருக்கா, 'செக்கப்' பண்ணி பாத்துட்டீங்களா...?

Google Oneindia Tamil News

Make sure your computer is safe
வாஷிங்டன்: இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உங்களது கம்ப்யூட்டர் சரியாக செயல்படுகிறதா அல்லது வைரஸ் பாய்ந்துள்ளதா என்பதை அறிய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது. அதில் போய் உங்களது கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் மால்வேர் வைரஸ் தாக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி, கம்ப்யூட்டர்களுக்கு மஞ்சக் கயிறும், தாயத்தும் போடாத குறையாக மக்கள் பீதியில் இருந்தார்கள். அந்த திங்கள்கிழமையும் இன்று வந்தாகி விட்டது.

இதுவரை எத்தனை கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் உங்களது கம்ப்யூட்டர் பத்திரமாக இருக்கிறதா, இல்லை பஞ்சாயத்தில் கிடக்கிறதா என்பதை அறிய அமெரிக்க எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது.

அதற்கான இணைப்பில் போய் கிளிக் செய்தால், பச்சை நிறத்தில் பெரிய டப்பா வரும். அப்படி வந்தால் நீங்கள் படு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்ததம். மாறாக ரெட் போட்டு வந்தால் உங்களது கம்ப்யூட்டர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அர்த்தம். உடனே அதை ஒரு 'சிஸ்டம் அட்மின் டாக்டரிடம்' காட்டி சரி செய்ய வேண்டும்.

இதோ இதுதான் அந்த இணைப்பு. இங்கு போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

http://dns-ok.us/

English summary
t's not a conspiracy theory, or an attempt by the federal government to surreptitiously install some sort of spy ware on our computers. It is an attempt to save many people from losing their internet connection after midnight tonight. Internet users will need to check their computers one more time before going to bed this evening. Thousands of people around the world whose computers were infected with the malicious DNSChanger software more than a year ago, may be faced with the possibility of not being able to get on the internet after midnight, EDT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X