Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்ல படகு கட்டணம் உயர்வு

Posted by:
Updated: Tuesday, July 10, 2012, 13:01 [IST]

 Ferry Services Thiruvalluvar Statue

குமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்காக இயக்கப்படும் படகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று கன்னியாகுமரி. குமரிக் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடமும், திருவள்ளுவர் சிலையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இரு இடங்களுக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வருகிறது. இந்த படகு சேவை கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 என்று 11.12.2000 அன்று நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட டீசல் விலை உயர்வு, படகு பராமரிப்பு செலவு, பழுதுபார்த்தல் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு என பல காரணங்களால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.30 ஆகவும், மாணவர்களுக்கான கட்டணம் ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைந்து சென்று பார்வையிட விரும்பும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் போன்றோருக்கு ரூ.150 சிறப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Story first published:  Tuesday, July 10, 2012, 12:54 [IST]
English summary
Poompuhar shipping corporation limited has increased the fare of ferry services to Thiruvalluvar statue and Vivekananda rock in Kanyakumari.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST