Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாள்!

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 10:57 [IST]

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாளாகும்.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3, 631 காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களை குரூப் 2 தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இந்த தேர்வு எழுத விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விரிவான தகவல்கள் அறிய http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
3,631 vacancies in various government offices will be filled by group II exams. The last date to apply for group II exams is july 13.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI