Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 15:06 [IST]

 Section Kingfisher Pilots Strike 5 Flights Cancer

டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு விமானிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிங்பிஷர் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தில்லியிலிருந்து தரம்சாலா மற்றும் டேராடூனுக்கு செல்லும் தலா 2 விமானங்களும், சிம்லாவுக்கு செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டதாக கிங்பிஷர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ஏர்பஸ் ஏ-320 வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 நாட்களில் ஊதியம் வழங்கக் கோரி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் 2-வது முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A section of pilots of Kingfisher Airlines today went on a strike over non-payment of salary and other dues for the past five months, forcing cancellation of five flights.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST