Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

திருமலையில் தரிசனத்திற்கு சென்ற சென்னை தம்பதியரின் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 11:01 [IST]

திருமலை: திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு, கோவில் மண்டபத்தில் தூங்கிய சென்னையை சேர்ந்த தம்பதியரின் 8 மாத ஆண் குழந்தை மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அடையாறை அடுத்த கோட்டூர் தெற்கு கடைசி தெருவை சேர்ந்தவர் ராஜா. கார் ஓட்டுநர். அவரது மனைவி தங்கப்பிரியா. இவர்களுக்கு காருணிஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், பிரதியுத் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது. ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர்.

திருப்பதியில் இருந்து திருமலை சென்ற ராஜாவின் குடும்பத்தினர், தங்களின் பொருட்களை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு, சாமி தரிசனத்திற்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, கடந்த 7ம் தேதி ராஜா குடும்பத்துடன் கோவில் மண்டபத்தில் படுத்து ஓய்வெடுத்தனர்.

இந்த நிலையில் பெற்றோருடன் படுக்க வைத்திருந்த 8 மாத குழந்தையான பிரதியுத்தை அதிகாலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. குழந்தையை அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வயர்லெஸ் மூலம் மற்ற பகுதிகளுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, குழந்தையை தேடினர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை தேடி வருகின்றனர்.

இது குறித்து குழந்தையை இழந்த தங்கப்பிரியா கூறியதாவது,

எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் 10 பேராக சென்னையில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தோம். கடந்த 7ம் தேதி சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் மண்டபத்திலேயே தூங்கிவிட்டு, காலையில் ஊர் திரும்பலாம் என்று தீர்மானித்தோம்.

இரவில் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினேன். அதிகாலையில் 4 மணி அளவில் எழுந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. நாங்கள் படுத்திருந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.

எங்கள் குழந்தையை எப்படியும் போலீசார் தேடி கண்டுபிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை திருமலையை வி்ட்டு, ஊர் திரும்பமாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.

English summary
Chennai parents Raja and Thangapriya losed their 8 months baby in Tirumala after the dharsan. Raja came with 10 family members for dharsan in Tirumala. Police filed a case and seaching for the baby.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab: 63 / 2, 8 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 194 / 6, 62.5 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST