Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கர்நாடகாவில் தொடரும் அரசியல் மல்யுத்தம்... மாநில பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 10:46 [IST]

 Karnataka Crisis Continues As Gowda Yeddyurappa

பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வர் பதவியை ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாங்கிக் கொடுத்த கையோடு எதியூரப்பாவின் திருப்தி முடிந்துபோய்விடவில்லை. எப்படியாவது மாநில பாஜக தலைவர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று முனைப்புகாட்டி வருகிறார்.

கர்நாடக முதல்வராக இருந்த சதானந்த கவுடா மாற்றப்பட்டு லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக அறிவிக்கப்பட்டதன் மூலம் "முதல்வர்" பதவி தொடர்பான ஓராண்டு பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது.

தற்போது அடுத்த கட்டமாக துணை முதல்வர்கள் மற்றும் மாநில பாஜக தலைவர் பதவிக்காக கடும் போட்டி நிலவுகிறது.

சதானந்த கவுடா மாற்றப்பட்டதால் அவர் சார்ந்த ஒக்கலிகா சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் குருபா சமூகத்தைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவுக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால் எதற்கு வம்பு .. துணை முதல்வர் பதவியே வேண்டாம் என்ற மூடில் இருக்கிறது பாஜக மேலிடம்..

இதேபோல் கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவிக்கும் அடிதடி ஏற்படும் நிலை உள்ளது. முதல்வர் பதவிதானே கிடைக்கலை.. எப்படியாவது பாஜக தலைவர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்று எதியூரப்பா துடிக்கிறார். அதெப்படி நல்லா ஆட்சி நடத்திக் கொண்டிருந்த சதானந்த கவுடாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிட்டீங்க.. அப்ப அவருக்கு மாநில தலைவர் பதவி கொடுக்கனும் என்று ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான லாபி ஒன்றும் தீவிரமாக வேலை செய்து வருகிறது.

இதனால் கர்நாடக பாஜக பஞ்சாயத்து மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாகத்தான் நீடிக்கிறது.

English summary
A day after giving in to sulking leader B.S. Yeddyurappa's demands, the BJP has now been confronting with another crisis in Karnataka. If the party thought that by replacing Sadananda Gowda as chief minister with BSY loyalist Jagdish Shettar it would quell the dissent in the Karnataka BJP, it has been proved wrong.Yeddyurappa, who represents the huge Lingayat community in the state, now wants the post of Karnataka BJP president. Moreover, he wants the lion's share for his loyalists in the new Cabinet.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs