Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குடியரசுத் தலைவர் தேர்தல்... எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் திமுக

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 11:15 [IST]

சென்னை: திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அக்கட்சி கூட்டியுள்ளது. 17ம்தேதி இக்கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக கலந்து ஆலோசிப்பதற்கு திமுக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17.07.2012 அன்று நடைபெறும்.

இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும். கூட்டத்தில் சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்த முடியும். அந்த அடிப்படையில், இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், யாரும் வாக்களிக்காமல் இருந்து விடக் கூடாது என்றும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என்றும் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரணாப் முகர்ஜிக்கு குறைந்த ஓட்டுக்களே கிடைக்கும். காரணம், திமுகவுக்கு குறைந்த ஓட்டுக்களே உள்ளன. அதிமுகவுக்குத்தான் தமிழகத்தில் அதிக வாக்குகள் உள்ளன. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஏ.சங்மாவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும். பிரணாப்புக்கு இங்கு நம்பர் டூ இடமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK has convened its MLAs and MPs meeting on presidential poll on July 17.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs