Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காவலரை கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிய பெண்.. குண்டு பாய்ந்து பரிதாப சாவு!

Posted by:
Published: Tuesday, July 10, 2012, 17:20 [IST]

 Woman Hugs Cop Dies When Gun Accid

டெட்ராய்ட்: அமெரிக்காவில் ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது. பார்ட்டி ஒன்றில், காவலரை கட்டிப்பிடித்து ஒரு பெண் டான்ஸ் ஆடியபோது அந்தக் காவலர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அதிலிருந்து குண்டு பாய்ந்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெட்ராய்ட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் அடைஷா மில்லர். இவர் தனது 25வது பிறந்த நாளையொட்டி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது பலரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினர். அப்போது அந்த நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுக்க ஒரு போலீஸ் அதிகாரியும் வந்திருந்தார். டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மில்லர், அந்த அதிகாரியின் பின்னால் போய் பின்னாலிருந்து அவரைக் கட்டிப்பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அதிகாரி வைத்திருந்த துப்பாக்கியின் விசையில் கை பட்டு சுட்டு விட்டது.

துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு, மில்லரின் நுரையீரலுக்குள் புகுந்து இதயத்தைத் துளைத்து விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மில்லரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.

English summary
A Detroit woman died Sunday when she hugged a cop, whose gun accidentally discharged. Adaisha Miller was celebrating and dancing at her 25th birthday party when she was killed by the off-duty police officer. Sunday, the Huffington Post reported that Miller, who would have turned 25 today, was outside at a social gathering for her birthday party when the shooting took place.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter