Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மொபைல் பேன் பேச தடைவிதித்த வினோத கிராமம்!

Posted by:
Published: Friday, July 13, 2012, 14:24 [IST]

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டம் அசரா கிராமத்தில் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மொபைல் போன் பேச கிராம பஞ்சாயத்து தடை விதித்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பக்பட் மாவட்டத்தின் பசெளத் மற்றும் கெளஸ்பூர் கிராமங்களில் மொபைல் போன் பேசவும், மொபைல் போனில் அதிக சப்தம் வரும் மியூசிக்கை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதே பாணியில் அசரா கிராமம் அதிரடி தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த கிராமத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் அனைத்து சமூக மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதாவது 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது, மார்க்கெட்டுக்கு செல்லும்போது ஆண்கள் துணையின்றி தனியே செல்லக் கூடாது, காதல் திருமணங்களை எவரும் செய்து கொள்ளக் கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சமூகத்தில் தீமைகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பஞ்சாயத்து தலைவரே இல்லாமல் ஊர் மக்களே ஒன்று கூடி ஒருமனதாக தீர்மானம் போட்டிருக்கிறார்களாம்.

ஆனால் வழக்கம்போல மாவட்ட நிர்வாகம், "அப்படியா!எங்களுக்கு எந்த தகவலும் இல்லையே"என்றுதான் கூறியிருக்கிறது.

English summary
A panchayat organized in village Asara of district Baghpat on Wednesday banned women of 40 years and less from using mobile phones and also directed them not to visit markets without male companion. The panchayat also decided to boycott love marriages in the village. Police , however, has shown ignorance about any such panchayats. "We are not aware about such panchayat and their decrees against women", said the ADG office in Baghpat.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI