மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி இன்று மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவிக்க உள்ளார்.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இன்று இரவு பால்தாக்கரேவை அவரது இல்லத்தில் பிரணாப் முகர்ஜி சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தாக்கரேவுடன் சிவசேனாவின் செயல் தலைவரான உத்தவ் தாக்கரேயும் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோரும் உடன் இருப்பர் என்று தெரிகிறது.
மும்பையில் முதல்வர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் பிரணாப் சந்திக்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளர் சங்மா கடந்த வாரம் மஹாராஷ்டிராவில் முகாம் போட்டு ஆதரவு திரட்டியிருந்தார்.


















