Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கை அணியில் 8 விடுதலைப் புலிகள்

Posted by:
Published: Friday, July 13, 2012, 12:44 [IST]

 Former Tamil Tigers Picked Saf Games

கொழும்பு: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இலங்கை அணியில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் அடுத்த ஆண்டு தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இலங்கை சார்பாக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு கடந்த மாதம்(ஜூன்) நடைபெற்றது. இதில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஹர்ஷா அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு பல்வேறு முகாம்களில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 133 பேரில் இருந்து திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் துப்பாக்கி சுடுவதில் திறமையானவர்கள்.

கிரிக்கெட்டில் 2 பேரும், ஒரு கராத்தே வீரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கான தூப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

English summary
Sri Lankan authorities have picked eight former Tamil Tigers in the national squad, and some of them will take part in the South Asian Federation (SAF) Games in Delhi next year.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Mumbai Indians: 40 / 1, 4.3 Overs