Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மன்னனைத் தேடி மு.க.அழகிரி காருக்குள் பாய்ந்த போலீஸார்!

Posted by:
Published: Friday, July 13, 2012, 12:50 [IST]

 Madurai Police Barge Into M K Azhagiri

மதுரை: மதுரையில் வீடு அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனைத் தேடி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் காரில் போலீஸார் சோதனை போட்டதால் அவர் கோபமடைந்தார்.

மதுரையைச் சேர்ந்த அருமைநாயகம் என்பவரின் வீட்டை மிரட்டி வாங்கி விட்டதாக பி.எம்.மன்னன் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். திமுகவினர் மீது போலீஸார் பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய நாளன்று இந்த வழக்குப் போடப்பட்டது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து மன்னன் எஸ்கேப் ஆகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் மு.க.அழகிரி, மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்குப் போய்க் கொண்டிருந்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் போய்க் கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இரண்டு இடங்களில் அழகிரி காரை போலீஸார் நிறுத்தி சோதனை போட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அழகிரி ஏன் இந்த சோதனை என்று கேட்டபோது போலீஸார் சரியாகப் பதிலளிக்கவில்லையாம்.

இதனால் கோபமடைந்த அழகிரி, நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் தேடும் நபர் எனது காரில் இல்லை என்று கோபமாக கூறினாராம். அழகிரியின் கோபத்தைத் தொடர்ந்து போலீஸார் சோதனையைக் கைவிட்டனராம்.

ஆனால் அழகிரியுடன் வந்த பிற கார்களை போலீஸார் தொடர்ந்து சோதனை போட்டபடி இருந்தனராம். அழகிரியுடன் வந்தவர்களையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தனராம்.

English summary
Madurai police stopped and checked union minister M.K.Azhagiri's car in search of P.M.Mannan, former deputy mayor of Madurai.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter