Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒபாமா மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வெள்ளை மாளிகை போலீஸ்காரர்!

Posted by:
Published: Saturday, July 14, 2012, 12:24 [IST]

 White House Cop Threatens Kill Mich

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு வெள்ளை மாளிகை காவலர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, மோட்டார் பைக்கில் பாதுகாப்புக்கு செல்லும் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒபாமாவின் மனைவியை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அத்துடன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அந்த துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்ல போவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் வென்டோலின் கிரம்ப் கூறுகையில், "புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரியை வெள்ளை மாளிகையிலிருந்து, நிர்வாக பணிக்கு மாற்றியுள்ளோம். கொலை மிரட்டல் குறித்து நாங்கள் கவனமாக விசாரித்து வருகிறோம் என்றார்.

இந்த கொலை மிரட்டல் குறித்து அதிபர் குடும்பத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

English summary
US first lady Michelle Obama has reportedly received a death threat from a police officer who worked as a motorcycle escort for White House officials and visiting dignitaries. Washington DC police are investigating a metro police officer for making the alleged comments.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs