கவுகாத்தி: வடகிழக்கு இந்திய பகுதிகளில் இன்று அதிகாலை 1.25 மணி அளவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
வடகிழக்கு இந்திய பகுதிகளில் இன்று அதிகாலை 1.25 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை இதநகர், கவுகாத்தி, அகர்தலா மற்றும் நாகலாந்தின் உட்புற பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலையில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்து சாலைகளில் பயத்துடன் நின்றனர்.
நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 43 கி.மீ. தூரத்திலும், 6.5 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 5.5 ரிக்டர் அளவு பதிவாகியதாக ஷில்லோங் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் யாரும் பலியானதாக தகவல் இல்லை. மேலும் பொருட்சேதமும் ஏற்படவில்லை.










