Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

திருப்பூரில் இடி மின்னலுடன் கனமழை: சாலைகளில் வெள்ளம்

Posted by:
Published: Sunday, July 15, 2012, 16:53 [IST]

திருப்பூர்: திருப்பூரில் திடீரென்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. கடந்த சிலவாரங்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் திருப்பூர் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்மேற்குப் பருவமழை ஏமாற்றி வந்த நிலையில் திருப்பூரில் இன்று பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஈரப்பதமான காற்று வீசிய சூழ்நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது.

எதிர்பாராத மழையால் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் சாலையோரங்களில் ரெடிமேட் ஜவுளிக்கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். நீண்டநாட்களாக போக்கு காட்டி வந்த மழை இன்று கனமழையாக மாறி பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் இந்த திடீர் மழையினால் தணிந்து குளுமை பரவியதால் நகரமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

English summary
Heavy rain brought some cheers to the people of TIrupur today. Rain lashed the town and all roads were flooded.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL