Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜுனியர் விகடன் மீது முத‌ல்வ‌ர் ஜெயலலிதா 4வது முறையாக அவதூறு வழக்கு

Posted by:
Published: Wednesday, July 18, 2012, 14:43 [IST]

சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி ஜூனியர் விகடன் இதழ் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொட‌ரப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சென்னை மாநகர் அரசு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் பத்திரிக்கை 15.7.2012 தேதியிட்ட இதழில் கொடநாடு வந்த குஷி ராவணன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், எஸ்டேட்டின் சில பகுதிகள் ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராவணனை கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு வரவழைத்து, அவரது பிடியில் இருந்த இடங்களை முறையப்படி பெயர் மாற்றம் செய்தாதகவும் அதனால், அவர் பவ்யமாக வந்து முடித்துக் கொடுத்துவிட்டு நகர்ந்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், பங்களா அறை ஒன்றில் புதிய பெயரில் பத்திரத் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது ஜெயலலிதா அங்கு வரவில்லையாம். சசிகலா மட்டும் இன்டர்காமில் ராவணனிடம் இன்னும் சில விஷயங்கள் தொடர்பாகக் கட்டளை போட்டார் என்றும் சொல்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறாகும். உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வ‌ர் தங்கியுள்ள கொடநாடு பங்களாவுக்கு ராவணன் செல்லவே இல்லை. முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அவதூறு செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழ் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் ஜெயல‌லிதா ஏற்கனவே மூன்று அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Jayalalithaa has filed defamtation case against Junior Vikatan for the 4th time.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL