Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மிஷலுக்கு 'கிஸ்' கொடுத்த ஒபாமா... ரசித்துப் பார்த்த மகள் மலியா!

Posted by:
Published: Wednesday, July 18, 2012, 11:53 [IST]

 Obamas Pose Kiss Cam During Basketball Match

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும், பிரேசிலுக்கும் இடையே நடந்த நட்புறவு கூடைப்பந்தாட்டைப் போட்டியைக் காண தனது மனைவி மிஷல் ஒபாமா, மகள் மலியா ஆகியோருடன் சென்ற அதிபர் பராக் ஒபாமா, போட்டியின் இடையே மனைவிக்கு அழுத்தமான முத்தம் கொடுத்தார். இதை மகள் மலியாவும், மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரும் ரசித்துப் பார்த்து கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்த மிஷலுக்கு வெட்கம் பிடுங்கித் தின்று விட்டதாம்.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணிக்கும், பிரேசில் அணிக்கும் இடையே ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய நட்புப் போட்டி ஒன்றுக்கு வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். போட்டி, வாஷிங்டன் வெரிசோன் மையத்தில் நடந்தது. அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷல், மகள் மலியா, துணை அதிபர் ஜோ பிடென், அவரது பேத்தி உள்ளிட்ட பிரபலங்களும் திரண்டிருந்தனர்.

ஒபாமாவே ஒரு சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்தான். தனது மகள் மலியா, சாஷா ஆகியோருக்கு இவர்தான் கூடைப்பந்தாட்ட பயிற்சியாளரும் கூட. மேலும் அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒபாமா ஆதரவாளர்கள். இதனால் போட்டிக்கு ஆஜராகியிருந்தார் ஒபாமா.

போட்டி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது. வீரர்கள் விளையாடுவதை அத்தனை பேரும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒபாமா, தனது மனைவியின் பக்கம் திரும்பி முத்த விளையாட்டை ஆரம்பித்தார். முதலில் நெற்றியல் கொடுத்தார். பிறகு உதட்டில் கொடுத்தார். இப்படியாகப் போய்க் கொண்டிருந்தது இவர்களின் முத்த விளையாட்டு. இதைப் பார்த்த கேமராக்கள் ஒபாமாக்கள் பக்கம் திரும்பி அவர்களின் முத்தத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்தன.

ஒபாமாக்கள் முத்தமிட்டுக் கொண்ட காட்சியை அத்தனை பேரும் பார்த்து ஆச்சரியமடைந்தனர். பிறகு ஹோவென குரல் எழுப்பி உற்சாகப்பட்டனர். மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளும் நீங்கள்தான் என்று அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமாவுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.

அம்மாவுக்கு, அப்பா முத்தம் கொடுத்து விளையாடியதை பக்கத்தில் இருந்த மகள் மலியா பலத்த புன்சிரிப்புடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து மிஷலுக்குத்தான் வெட்கம் தாங்க முடியவில்லை. உரக்க சிரித்து விட்டார். பின்னர் மகள் பக்கம் திரும்பிய ஒபாமா, மலியாவுக்கு கன்னத்தில் ஒரு பாசமான முத்தம் கொடுத்தார்.

சரி போட்டி என்ன ஆச்சுன்னா சொல்லலையே... இப்போட்டியில் அமெரிக்க அணி 80-69 என்ற புள்ளிக் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.

English summary
While Team USA took on Brazil on the basketball court Monday night, President Obama and First Lady Michelle Obama found themselves playing a game of their own – one against the Kiss Cam! As the POTUS and FLOTUS took in the pre-Olympic match-up at the Verizon Center in Washington, cameras immediately cut to the Obamas, who sat courtside with Vice President Joe Biden. Obama delivered a sweet kiss on her lips and forehead. The crowd erupted in cheers, chanting "Four more years!"
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI