Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மறுபடியும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார் அன்புமணி ராமதாஸ்!

Posted by:
Published: Friday, July 20, 2012, 17:25 [IST]

டெல்லி: மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சிபிஐ கோர்ட்டில் 2வது முறையாக ஆஜரானார்.

இந்தூரில் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக அன்புமணி சிபிஐ கோர்ட்டில் நேரில் சரணடைந்தார். அப்போது தனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி மனு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அன்புமணி ஆஜரானார். அப்போது அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி, ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி சிபிஐக்கு உத்தரவிட்டார்.

English summary
Former union health minister Anbumani Ramadoss appeared before CBI court for 2nd time in a case related to medical college permission fraud.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter