Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒலிம்பிக் போட்டி: மனஅழுத்தத்தை குறைக்க காமெடி படம் பார்க்கும் இந்திய வில்வித்தை அணி

Posted by:
Updated: Friday, July 20, 2012, 16:13 [IST]

லண்டன்: ஒலிம்பிக் போட்டியின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், பாலிவுட் படங்களில் வரும் காமெடி காட்சிகளை பார்ப்பதாக இந்திய வில்வித்தை அணியினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 81 பேர் பங்கேற்கின்றனர்.

 london olympics indian archers unwind watching comedy

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அணிக்கு அதிக பதக்கங்கள் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் வீரர்கள், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், இந்திய வில்வித்தை அணியினர் காமெடி படங்களை பார்க்கின்றனர்.

இது குறித்து இந்திய வில்வித்தை வீராங்கனை பம்பாய்லாதேவி கூறியதாவது,

மனஅழுத்தத்தை குறைக்க நாங்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகிறோம். இதில் காமெடி சினிமாக்களை பார்ப்பது ஒரு முறை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன் காமெடி படங்களை பார்த்துவிட்டு செல்வதன் மூலம், மனஅழுத்தம் குறைந்து, சிறப்பாக விளையாட முடியுது.

இளம் வீராங்கனையான சேக்ரோவாலு ஸ்வ்ரோ எளிதில் கோபப்படக்கூடியவர். ஆனால் அதே வேகத்தில் சாந்தமாகிவிடுவார். தீபிகாகுமாரி விவாதம் செய்யாமல், அமைதியாக இருந்து கவனித்து செயல்படுவார். நாங்கள் அனைவரும் சுமூகமாக பழகி வருகிறோம்.

ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. இந்திய அணியில் உள்ள நாங்கள் இணைந்து ஒரு குடும்பம் போல செயல்படுகிறோம். எங்களுக்குள் மூத்தவர், இளையவர் என்ற பாகுபாடு எதுவும்.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் முதல் நபராக தீபிகா குமாரி அம்பை எய்வார். அதன்பிறகு சேக்ரோவாலு ஸ்வ்ரோ போட்டியில் பங்கேற்பார். கடைசியாக நான் அம்பை எய்வேன் என்றார்.

Story first published:  Friday, July 20, 2012, 10:38 [IST]
English summary
To avoid being bogged down by pressure ahead of the Olympics, the Indian women's archery team chilled out by catching comedy film before heading to London for the mega-event.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL