Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக் போட்டி: பாதுகாப்பு பணிகளில் இங்கிலாந்துக்கு உதவ அமெரிக்கா ஆர்வம்

Posted by:
Published: Friday, July 20, 2012, 15:54 [IST]

 Us Offers Assistance Britain The Se

வாஷிங்கடன்: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இங்கிலாந்திற்கு உதவு அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க ராணுவ செயலாளர் லியன் பனிட்டா தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து, மொத்தம் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, தாக்குதல் நடத்த சில தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.

இதனால் ஒலிம்பிக் போட்டியின் போது, லண்டனில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ செயலாளர்கள் கூட்டாக கலந்து கொண்டு பேட்டி அளித்தனர்.

அப்போது இங்கிலாந்து ராணுவ செயலாளர் பிலிப் ஹமோன்ட் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியை பாதுகாப்பான முறையில் நடத்த தேவையான திறமை எங்களிடம் உள்ளது. இதன் மூலம் அனைவரும் போட்டிகளை பயமின்றி கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக, ராணுவ தனிப்படையை ஏற்படுத்தி உள்ளோம். நாங்கள் நினைத்தை விட, தனி ராணுவப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டியின் ஒவ்வொரு போட்டியிலும், கட்டத்திலும் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவப் படை திட்டமிட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியின் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமான ராணுவத்தை களமிறக்க திட்டம் இல்லை.

மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், ஒலிம்பிக் போட்டி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். அதிக பாதுகாப்பு தேவைப்பட்டால், களமிறங்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லியன் பனிட்டா கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்த இங்கிலாந்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பை உதவிகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தகுந்த பாதுகாப்பு வசதிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

English summary
The United States offered its assistance to Britain for the security of the London Olympics as the visiting British Defence Secretary vowed to deliver a safe, secure and enjoyable summer games later this month.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Mumbai Indians: 20 / 1, 3.2 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 12 / 0, 2 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST