Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆபாச ஆட்டம்.. கேத்தி பெர்ரி மீது வழக்கு!

Posted by:
Published: Friday, July 20, 2012, 17:03 [IST]

 Katy Perry Indecency Charge Go Court

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் தொடக்க விழாவின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டோக் போலிஞ்சருடன் ஆபாசமான முறையில் நடனமாடியதாக பிரபல பாடகி கேத்தி பெர்ரி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை வழக்கறிஞர் ஜெபக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.ஐபிஎல் தொடக்க விழாவின்போது கேத்தி பெர்ரியின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவருடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சரும் இணைந்து ஆடினார்.

அப்போது கேத்தி பெர்ரி கவர்ச்சிகரமான டிரஸ் போட்டிருந்ததாகவும், போலிஞ்சரும் அவரும் ஆடிய ஆட்டம் கவர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், இது அநாகரீகமான ஒன்று என்றும் வக்கீல் ஜெபக்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு ஜூலை 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

English summary
An indecency complaint against Katy Perry and Aussie cricketer Doug Bollinger will go to court, it has emerged. The playful onstage antics of the pop star and the sportsman, at the opening of the Indian Premier League in April, offended some members of the Indian public. The indecency case, which relates to the moment Doug put his arms around Katy to demonstrate a cricket bat move at the Chennai event, will go before an Indian court later this month.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST