Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பேத்திக்கு இப்படியா டிரஸ் எடுப்பது.. மாமியார் மீது ஏஞ்செலீனா ஜூலி கோபம்!

Posted by:
Published: Friday, July 20, 2012, 14:58 [IST]

 Angelina Jolie Is Furious With Brad

தனது 6 வயது மகள் ஷிலோவுக்கு, சிறுமிகள் அணியும் டிரஸ்ஸை வாங்கிக் கொடுத்து விட்டார் என்பதற்காக மாமியார் ஜேன் பிட் மீது கோபமாக இருக்கிறாராம் ஹாலிவுட் உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலி.

பிராட் பிட்- ஜூலி தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் பெற்ற குழந்தைகளும், தத்துக் குழந்தைகளும் அடக்கம். மூத்த குழந்தையின் பெயர் மடாக்ஸ், 10 வயதாகிறது. அடுத்து 9 வயது பேக்ஸ், 7 வயது ஜஹாரா, 4 வயது இரட்டையர்கள் நாக்ஸ் மற்றும் விவியன். இன்னொரு மகளின் பெயர் ஷிலோ, 6 வயதாகிறது. இவர் ஜூலியும், பிட்டும் சேர்ந்து பெற்றெடுத்த மகள் ஆவார்.

ஷிலோவை ஒரு பெண் போல வளர்க்க விரும்பாமல் ஆம்பளை மாதிரி வளர்த்து வருகிறார்களாம் ஜூலியும், பிட்டும். இதனால் ஷிலோவுக்கு சிறார்களுக்கான டிரஸ் போட வைத்து அழகு பார்க்கிறார்கள்.

ஆனால் பாட்டி ஜேன் பிட்டுக்கு, அதாவது பிராட் பிட்டின் தாயாருக்கு இது பிடிக்கவில்லையாம். அவர் எப்போதும் ஷிலோவுக்கு சிறுமிகள் அணியும் டிரஸ்ஸைத்தான் வாங்கித் தருவாராம். இது ஏஞ்செலீனாவுக்குப் பிடிக்கவில்லையாம். பிராட் பிட்டும் கூட தனது அம்மாவின் டிரஸ் டேஸ்ட் பிடிக்கவில்லை என்று கூறுகிறாராம்.

இதுகுறித்து ஏஞ்செலீனாவுக்கு நெருக்கமான தரப்பு கூறுகையில், ஷிலோ எப்போதுமே பையன்கள் போடும் டிரஸ்ஸைத்தான் போட்டிருப்பார். அதைத்தான் ஜூலியும், பிட்டும் கூட விரும்புகிறார்கள். ஆனால் ஜேன் பெண்களைப் போல ஷிலோவை வளர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். இது ஜூலிக்குப் பிடிக்கவில்லை, பிட்டும் விரும்பவில்லை.

ஜேன் தொடர்ந்து தங்களுக்கு முரண்பாடாக நடந்து கொள்வதாக ஜூலியும், பிட்டும் நினைக்கிறார்கள். ஜூலியும், பிட்டும் ஓரினச் சேர்க்கைத் திருமணத்திற்கு பெரும் ஆதரவாக இருப்பவர்கள். ஆனால் ஜேன் அது பிடிக்காதவர். சமீபத்தில் கூட ஓரினச்சேர்க்க்கையாளர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கூட வெளியிட்டிருந்தார்.

இப்போது பேத்திக்கு டிரஸ் எடுத்து ஜூலியை மேலும் எரிச்சலாக்கியுள்ளார். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே என்றார்கள்.

எங்க பார்த்தாலும் மாமியார்-மருமகள் சண்டைதான் போலிருக்கே...!

English summary
Angelina Jolie is reportedly furious with her fiancé Brad Pitt's mother Jane Pitt for buying her six-year-old daughter Shiloh fairy outfits. The Oscar-winning actress raises six children with Jane's son Brad and while she is happy for their oldest biological daughter Shiloh to dress like a boy, Jane insists on purchasing her girly outfits, much to Angelina Jolie's annoyance.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs