Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குடியரசுத் தலைவர் தேர்தல்: கர்நாடகத்தில் பாஜக கட்சி மாறி ஓட்டு- பிரணாப்புக்கு எக்ஸ்ட்ரா ஓட்டு

Posted by:
Updated: Sunday, July 22, 2012, 18:40 [IST]

 Prez Poll Live Cross Voting Karnataka Pranab Leadwidens

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் மாறி ஓட்டு

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு 120 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் சங்மாவுக்கு கிடைத்ததோ 103 ஆக்குகள்தான். பிரணாப்புக்கோ 117 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 3 வாக்குகள் செல்லாதவை. ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்கவில்லை.

மற்ற மாநிலங்களில்...

இதையடுத்து மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் போட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 182 வாக்குகள் கிடைத்தன. அதாவது 36,936 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு வெறும் 3 வாக்குகள்தான் கிடைத்தன. தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தேர்தலைப் புறக்கணித்திருந்தன.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மொத்தம் 126 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பிரணாப் முகர்ஜிக்கு 110 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 13 வாக்குகளே கிடைத்தது. 2 வாக்குகள் செல்லாதவை. ஒருவர் வாக்களிக்கவில்லை.

பீகார் மாநிலத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 146 வாக்குகளும், சங்மாவுக்கு 90 வாக்குகளும் கிடைத்தன. அருணாசலப்பிரதேசத்தில் பிரணாப்முகர்ஜிக்கு 54 வாக்குகளும் சங்மாவுக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 3 வாக்குகள் செல்லாதவை.

40 எம்.எல்.ஏக்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் 31 வாக்குகளை சங்மா பெற்றார். பிரணாப் முகர்ஜிக்கு வெறும் 9 வாக்குகள்தான் கிடைத்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 50 எம்.எல்.ஏக்களின் வாக்குகளை சங்மா பெற்றார். 39 வாக்குகளே பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்தது. ஒருவாக்கு செல்லாதது.

இதேபோல் குஜராத் சட்டப்பேரவையில் 182 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் சங்மாவுக்கு 123 வாக்குகள் கிடைத்தன. பிரணாப் முகர்ஜிக்கு 59 வாக்குகள் மட்டும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

ஜார்க்கண்ட், ஜம்மு., காஷ்மீர், இமாச்சலப் பிரதேசங்களிலும் பிரணாப் முகர்ஜியே கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். ஜம்முக் ஆஷ்மீரில் 68, இமாச்சலில் 44 வாக்குகள், ஜார்க்கண்ட்டில் 60 வாக்குகள் கிடைத்தது.

கேரளாவில் 140 எம்.எல்.ஏக்களில் 124 பேர் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தனர். 15 பேர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் 230 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜக செல்வாக்கு மிக்க இம்மாநிலத்தில் சங்மாவுக்கு 156 வாக்குகளும் பிரணாப் முகர்ஜிக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. 4 வாக்குகள் செல்லாதவை.

மஹாராஷ்டிராவில் பிரணாப் முகர்ஜிக்கு 225 வாக்குகளும் சங்மாவுக்கு 47 வாக்குகளும் கிடைத்தன. மணிப்பூரில் பிரணாப் முகர்ஜிக்கு 58, சங்மாவுக்கு 1 வாக்கும் கிடைத்தது.

ஒசாவில் சங்மாவுக்கு 115 வாக்குகளும் பிரணாப் முகர்ஜிக்கு 26 வாக்குகளும் கிடைத்தன. சிக்கிமில் பிரணாப் முகர்ஜி 28 வாக்குகளையும் சங்மா 7 வாக்குகளையும் பெற்றார். திரிபுரவில் 56 வாக்குகளை பிரணாப் பெற்றார். சங்மவுக்கு 26வாக்குகள் கிடைத்தன.

ராஜஸ்தானில் பிரணாப் முகர்ஜிக்கு 113, சங்மாவுக்கு 85 வாக்குகள் கிடைத்தன. உத்தர்காண்டில் பிரணாப் முகர்ஜிக்கு 39 வாக்குகளும் சங்மாவுக்கு 30 வாக்குகளும் கிடைத்தன.

Story first published:  Sunday, July 22, 2012, 16:23 [IST]
English summary
Karnataka, where the BJP is in power, saw Sangma getting only 103 votes out of 224 while Pranab Mukherjee's UPA credentials didn't stop him from getting 117 votes in Presidential poll.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
My Place My Voice
மணி சுரேசு on
babu on
arunprashad selvaraj on
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI