Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பிரபாகரன் திருமண நாளில் என் திருமணம் நடக்கும்! - சீமான் அறிவிப்பு

Posted by:
Updated: Tuesday, July 24, 2012, 18:49 [IST]

 Seeman Announces His Marriage

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் தேதி என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

பாஞ்சாலங் குறிச்சி, தம்பி போன்ற படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்தி கசிந்து வந்தது.

அவரிடமே இதுபற்றி கேட்டுவிட தீர்மானித்து தொடர்பு கொண்டோம்.

சீமான் கூறுகையில், "ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.

பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?

ஆனால் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் என்பது உறுதி.. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன்," என்றார்.

Story first published:  Tuesday, July 24, 2012, 13:56 [IST]
English summary
Seeman, the chief of Naam Tamilar party has announced his marriage. He will marry an ex ltte fighter on October 1st, the marriage day of Prabhakaran.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Rajasthan Royals: 44 / 1, 6.3 Overs
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.