Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இங்கிலாந்தில் மாமியாரை கொடுமைப்படுத்தி கொன்ற இந்திய மருமகளுக்கு 11 ஆண்டு சிறை

Posted by:
Published: Tuesday, July 24, 2012, 14:55 [IST]

லண்டன்: இங்கிலாந்தில் மாமியாரை முள் உருட்டி கொண்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்த இந்திய மருமகளுக்கு, 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தியாவை சேர்ந்தவர் ராஜ்விந்தர் குர்(37). அவரது மாமியார் பாஜித் குர் பட்டர்(56). இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் போர்டுலேண்டு சாலையில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வந்தார். இந்த நிலையில் 6 மாத விடுமுறைக்காக இங்கிலாந்தில் உள்ள இவரது மாமியாரின் வீட்டிற்கு வந்தார் ராஜ்விந்தர் குர்.

அங்கு மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வயது சென்ற பாஜித் குரை, ராஜ்விந்தர் அவ்வப்போது தாக்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராஜ்விந்தவர் குர் தனது மாமியாரை முள் உருட்டி கொண்டு தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பாஜித் குர் உயிரிழந்தார்.

பாஜித் குருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் அறிந்த, அதே பகுதியை சேர்ந்த ஜான் பிக் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பாஜித் குர் நிர்வாணமாக, தலையில் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மாமியாரை கொலை செய்ததை மறுத்த ராஜ்விந்தர், தன்னை மாமியார் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டினார்.

இந்த வழக்கின் விசாரணை வின்சஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, கொலை குற்றம் உறுதி செய்யப்பட்ட ராஜ்விந்தர் குருக்கு, 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English summary
An Indian-origin woman Rajvinder Kaur in Britain has been sentenced to 11 years in prison after she bludgeoned her mother in law to death with a rolling pin.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI