Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

4 அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு அதிபர் விருது: ஒபாமா அறிவிப்பு

Posted by:
Published: Wednesday, July 25, 2012, 11:43 [IST]

 Four Indian American Scientists Honoured By Obama

வாஷிங்டன்: இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராயச்சியாளர்களுக்கு அமெரிக்க அரசின் அதிபர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறும் 96 பேரில் 4 அமெரிக்கா வாழ் இந்தியர்களும் அடக்கம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினியர்களுக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் அதிபர் விருதை வழங்கி கௌரவிக்கிறது. பிரசிடென்ட் ஏர்லி கெரியர் அவார்ட்ஸ் ஃபார் சயன்டிஸ்ட்ஸ் அன்ட் என்ஜினியர்ஸ்(பிஇசிஏஎஸ்இ) என்று அழைக்கப்படும் அந்த விருதை இந்த ஆண்டு பெறும் 96 ஆராய்ச்சியாளர்களின் பெயரை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்டார்.

இந்த விருது பெறுபவர்களில் 4 அமெரிக்கா வாழ் இந்திய ஆராய்ச்சியாளர்களும் அடக்கம். மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வட் மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த பிஜு பாரேக்காடன், மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பவன் சின்ஹா, பாரக் ஏ. பதக் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி வேதுல சர்மா ஆகிய 4 இந்திய அமெரி்க்கர்கள் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருது இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Four Indian-American researchers are going to receive Presidential Early Career Awards for Scientists and Engineers (PECASE), the highest US honour for young professionals.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST